அனைவரும் ஒன்றுபட வேண்டும்; நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்
அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.
இதையும் படிக்க | அனைவரும் ஒன்றுபட வேண்டும்; நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்
Advertisement
Advertisement
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள இந்த நல்ல நேரத்தில் கடமைப்பட்டிக்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி. இந்த வெற்றியை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது நடந்துள்ளது என்று கூறினார்.
மேலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.