முகப்பு
தமிழ்நாடு

குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Updated On : 13 டிசம்பர் 2022, 2:46 pm IST
பகிர்:

41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

Advertisement

Advertisement

மத்திய பிரதேச மாநிலம், டெக்கான்பூரில் உள்ள பிஎஸ்எப் அகாடமியில் 14.11.2022 முதல் 26.11.2022 வரை 41வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன. இரண்டு வாரங்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமார் 300 குதிரைகளும், 600 ரைடர்களும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன், இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் லாலா பி கே டெய், சிரோகி சேலன்ஜ் கோப்பைகளையும், ஒரு வெள்ளிப் பதக்கமும், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை காவலர்கள் மணிகண்டன்,  மகேஷ்வரன், சுகன்யா ஆகியோர் தங்கப் பதக்கமும், முதுநிலை பெண் காவலர் சுகன்யா தங்கப் பதக்கத்தையும், டிஜிபி அரியானா கோப்பையும், குதிரை பராமரிப்பாளர் தமிழ்மணி அவர்கள் வெண்கலப் பதக்கமும், குதிரை பராமரிப்பாளர் ராஜகணபதி வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.

சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் வரலாற்றில் முதன் முறையாக 2018-ம் ஆண்டு குதிரையேற்ற அணி உருவாக்கப்பட்டது. அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை குதிரையேற்ற அணி பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.  முப்பது - நாற்பது ஆண்டுகளாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளை வெற்றி கொண்டு, தமிழ்நாடு காவல்துறை அணி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 3 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுத் தொகையாக விரைவில் வழங்கப்படும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments