மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
சேலம்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
நேற்று காலை வினாடிக்கு 9,314 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8,030 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. அச்சமூட்டிய கனவுகள்: பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளை ஒப்படைத்த திருடா்கள்
Advertisement
Advertisement
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 108.60-லிருந்து 108.98 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8030 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.96 டி.எம்.சி. ஆக உள்ளது.
குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வரத்து குறைந்தாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. மழை அளவு 50.40 மி.மீ. ஆக இருந்தது.