கருணாநிதியின் கடிதத் தொகுப்பு நூலை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முரசொலி இதழின் மூலமாக ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடுகிறார். விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார்.
Advertisement
Advertisement
1968 முதல் 2018 வரை தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம் 21,510 பக்கங்ளுடன் 54 தொகுதிகளாக வெளியிடப்படுகிறது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!