இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
தலைமை நீதிபதியாக நவம்பர் 22ஆம் தேதி பதவியேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு 62 வயது ஆன நிலையில் ஓய்வு பெறுகிறார். ஓய்விற்குபின் அன்னிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கிறார்.
இதையும் படிக்க- அமெரிக்க ஓபன்: அல்காரஸ் சாம்பியன்
Advertisement
Advertisement
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நாளை முதல் செயல்பட உள்ளார். முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.