காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சுற்றுலா பேருந்து. 
தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து - லாரி மீது மோதி விபத்து: 24 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்து - லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

DIN

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்து - லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோயிலுக்கு சுற்றுலா வந்த 15 பெண்கள் உள்பட 24 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா காளியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மலையனூர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சுற்றுலா பேருந்து மூலம் வந்துள்ளனர்.

தனியார் சுற்றுலா பேருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பெண்கள் உட்பட 24 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் பிரசாந்த் (வயது 32) மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT