சென்னை: ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
“சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் போன்ற நிறுவனங்களை சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்க பயணிப்பதை காணலாம்.
நேரத்தை கருதி பயணிக்கும் இத்தகைய பணியாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.