கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானில் ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(ஆக.28)ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

செவ்வாய் முதல் சனிக்கிழமை (ஆக.29-செப்.2) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 11 மாவடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT