கோப்புப்படம் 
தமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைப்பு அமல்!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை ரூ.200 குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று அமலுக்கு வந்தது.

DIN

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை ரூ.200 குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று அமலுக்கு வந்தது.

கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போா் ஆகியவற்றின் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், வீட்டு உபயோக எல்பிஜி விலையை ரூ.200 குறைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.200 குறைந்து ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT