தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்பு!  

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக  மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: இந்திய கம்யூ. செயலர் வீரபாண்டியன்

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

SCROLL FOR NEXT