திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.  
தமிழ்நாடு

கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். 

DIN

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் தலைவராக கடந்த 1962ல் பெரியாரால் நியமிக்கப்பட்டார். 

கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில்சென்ற  முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்திலும் கி. வீரமணிக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT