புழல் ஏரி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி பெய்த மழையால் இன்னும் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையின் பிரதானமான புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புழல் ஏரி பாதுகாப்பாகவே உள்ளது என்று தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் விளக்கம் தெரிவித்தார். 

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர்.

மேலும், ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர். 

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடி. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT