சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களை வருகிற டிச. 21 ஆம் தேதி முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாதம் வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில் வருகிற டிசம்பர் 21 முதல் 31 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என்றும்
2024, பிப்ரவரி 1 முதல் அந்தந்த பணிமனைகளில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.