தமிழ்நாடு

நெல்லை - திருச்செந்தூர் சாலைப் போக்குவரத்து முடங்கியது

DIN


நெல்லை: திருநெல்வேலி - திருச்செந்தூர்  இடையேயான சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கருங்குளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், சாலை வழியும் முடங்கியது.

இதனால், கருங்குளம் பகுதியில் 15 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலச்செவல், முக்கூடல் பேரூராட்சிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், உடையாா்பட்டி, கருங்குளம், கான்சாபுரம், சீவலப்பேரி உள்ளட்ட இடங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நெல்லையில் பல குளங்கள் உடைந்துள்ளன. சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக்கூடிய இடங்களின் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை ஓரளவுக்கு மழை ஓய்ந்திருந்தாலும், மழையின் பாதிப்பு முற்றிலுமாக நீங்கிவிட்டதாக கருதக் கூடாது. நீா் நிலைகளில் தண்ணீா் குறைந்துவிட்டதாக நினைத்து படம் எடுக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ கூடாது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

SCROLL FOR NEXT