தமிழ்நாடு

வாயுக் கசிவு: எண்ணூர் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு

எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் உர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

DIN

சென்னை: எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் உர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் தனியார் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அமோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்றது.

அப்போது குழாய்யில் ஏற்பட்ட உடைப்பால் அமோனியா வாயு கசிந்துள்ளது. இதனால், பெரிய குப்பம், சின்னக் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு காட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தனியார் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாயுக் கசிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT