முகப்பு
தமிழ்நாடு

புத்தாண்டு: ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வியாபாரிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் சாலையோரா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 30 டிசம்பர் 2023, 6:20 pm IST
பகிர்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் சாலையோரா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சேலம் மாவட்டம் ஏற்காடும் ஒன்று.  இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ஏற்காட்டை சுற்றிப் பார்த்து செல்வது வழக்கம். 

இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து  கடந்த ஒருவாரமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர். 

Advertisement

அதை தொடர்ந்து இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஏற்காடு வந்தவர்கள் இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்தனர். 

ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் ஏற்காடு படகு இல்லம் ஒன்று.  ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் விரும்பி படகு சவாரி செய்து மகிழ்வார்கள். அதே போல் இன்று படகு இல்லத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர். 

இதனால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணியர் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டது.

சுறறுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மனதிற்கு இதமான குளிர்ச்சி, பனிப்பொழிவு மற்றும் சிலு சிலு காற்று நிலவுவதால் ஏற்காட்டிற்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை விகிதம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.