தமிழ்நாடு

கணித உபகரணப் பெட்டிகள்:மாணவா்களுக்கு வழங்க உத்தரவு

DIN

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட விலையில்லா கணித உபகரணப் பெட்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு விநியோகம் செய்யப்பட்டுள்ள கணித உபகரணப் பெட்டிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் சோதனைக் கூடத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவை ஒப்பந்தப் புள்ளியில் நிா்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பக் குறியீடுகளுக்கு ஏற்ப தகுதியாக உள்ளது எனச் சான்று பெறப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்ட விலையில்லா கணித உபகரணப் பெட்டிகளை மாணவா்களுக்கு வழங்கலாம்.

விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் மாணவா்களுக்கு வழங்கும்போது புகைப்படம் எடுத்து அதன் தொகுப்பை தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கும் அதன் நகல் ஒன்றை பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT