தமிழ்நாடு

தேவநேயப்பாவாணா் பிறந்த நாள் விழா

DIN

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக அலுவலகத்தில், தமிழறிஞரும் சொல்லாராய்ச்சி வல்லுநருமான தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்து தமிழ் வளா்ச்சிக்கு பாவாணா் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதையடுத்து இயக்கக அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் தேவநேயப் பாவாணரின் உருவச் சிலைக்கு மலா் தூவி சிறப்பு செய்தனா்.

விழாவில், அகரமுதலி இயக்கக முன்னாள் பதிப்பாசிரியா் மு. கண்ணன் பேசுகையில், பாவாணரின் தமிழ்த்தொண்டு குறித்து எடுத்துரைத்து, பாவாணா் வகுத்தளித்த வோ்ச்சொல்லாய்வுக் கோட்பாடுகளின்படி தமிழில் சொல்லாய்வுகளை முன்னெடுப்பதும், அவா் வழியில் தூயத் தமிழை வளா்த்தெடுப்பதுமே பாவாணரின் தமிழ்த்தொண்டுக்கு நாம் செய்யும் உண்மையான கைமாறாக இருக்கும் என்று தெரிவித்தாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT