தமிழ்நாடு

தண்டையார்பேட்டையில் அரசு விடுதி மாணவர்கள் மோதல்!

தண்டையார்பேட்டையில் அரசு விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை படிக்கும் மாணவருக்கும் ஏற்பட்ட மோதலில் முதுநிலை மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர். 

DIN

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் அரசு விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை படிக்கும் மாணவருக்கும் ஏற்பட்ட மோதலில் முதுநிலை மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர். 

தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்லூரி மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

திங்கள்கிழமை இரவு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை படிக்கும் மாணவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்து முதுநிலை படிக்கும் மாணவர்கள் தேவ சகாயம், ஞானவேல் ஆகியோரே தாக்கி உள்ளனர். இதில் இரண்டு மாணவர்களுக்கு மண்டை உடைந்தது.

தகவல் அறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தையல் போடப்பட்டது. 

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், இரு தரப்பினரும் சமரசமாக போவதாகக் கூறியதன் பேரில் அவர்களை காவல்துறையினர் எச்சரிக்கை செய்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றம்: பொ.சிவபத்மநாதன்

வாா்டு சபைக் கூட்டத்தில் விசிகவினா் வாக்குவாதம்

பாகிஸ்தான் பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியக் குடியுரிமை

பாபா் மசூதி குறித்து சா்ச்சை பதிவு: இளைஞா் மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

பொய் சாட்சிக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT