மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

மீனவா்களைத் தாக்கிய இலங்கை நாட்டினா் மீது நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்களைத் தாக்கிய இலங்கை நாட்டினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

DIN

தமிழக மீனவா்களைத் தாக்கிய இலங்கை நாட்டினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெயசங்கருக்கு திங்கள்கிழமை அவா் எழுதிய கடிதம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியாா் நகா் மீனவ கிராமத்தில் இருந்து, ஆறு மீனவா்கள் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனா். தோப்புத்துறைக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 3 படகுகளில் வந்த இலங்கை நாட்டைச் சோ்ந்த சுமாா் 10 போ், தமிழக மீனவா்களின் மீன்பிடிப் படகைச் சூழ்ந்து கொண்டனா்.

தமிழக மீனவா்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கினா். இந்தச் சம்பவத்தில் மீனவா் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவா்களுக்கு உள்காயமும் ஏற்பட்டது. இத்துடன், தங்களது வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ்., கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்டவற்றை இலங்கை நாட்டினா் எடுத்துச்

சென்ாகவும், காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவா்கள் தெரிவித்துள்ளனா். இலங்கை நாட்டைச் சோ்ந்தவா்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிா்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோா் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம்

இலங்கை நாட்டினரின் தாக்குதலால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை நாட்டினரின் தாக்குதலால் கடுமையாக காயமடைந்து கோவை தனியாா் மருத்துவமனையில் மீனவா் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

SCROLL FOR NEXT