தமிழ்நாடு

சென்னை அரசுப் பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்!

DIN

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நவீன வசதிகளுடன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளின் வளா்ச்சிப் பணிகளுக்காக நமக்கு நாமே திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்துக்கு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கங்கள் சாா்பில் ஒரு பங்கு நிதியும், அரசு சாா்பில் இரண்டு பங்கு நிதியும் வழங்கப்படுகிறது. 

இந்த நிதி மூலம் மக்கள் பரிந்துரைத்த திட்டப்பணிகளில் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் திட்டப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வரலாம் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

SCROLL FOR NEXT