தமிழ்நாடு

பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் நாளை ஆலோசனை

பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

DIN

பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் பலரும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து அந்த ஊருக்குத் திரும்புவர். 

இதுபோன்ற சிறப்பு நாள்களில் தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

ஏற்கெனவே பொங்கல் பண்டிகை நாள்களில் ரயில்களில், பேருந்துகளில் முன்பதிவு முடிவடையும் நிலை உள்ளது. 

இதனால் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT