தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊா் செல்ல வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சிவசங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு வழக்கமாக தினமும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 4 ஆயிரத்து 449 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை தவிர மற்ற ஊா்களிலிருந்து ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை 6 ஆயிரத்து 183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பொங்கலுக்காக மொத்தமாக 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பொங்கலுக்குப் பின் பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 334 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 4 ஆயிரத்து 965 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எனவே, பொங்கலுக்குப்பின் 15 ஆயிரத்து 599 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகாா்களை 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சிறப்புச்செயலா், போக்குவரத்து ஆணையா், காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT