தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு!

DIN


காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 3,483 கன அடியிலிருந்து 3,123 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 29-ஆம் தேதி விநாடிக்கு 5,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை நீா்த்திறப்பு10,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் புதன்கிழமை காலை 117.48 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 117.06 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.85 டி.எம்.சியாக உள்ளது. 

மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தாலும் ஜனவரி 28-இல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என்பதாலும் அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருப்பதாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

SCROLL FOR NEXT