42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு! 
தமிழ்நாடு

42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜன.9ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,260 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.74,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில் நகைப்பிரியர்களுக்கும், பெண்களை பெற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT