தமிழ்நாடு

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம்(93) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.   

DIN

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம்(93) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.   

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்னம் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்தார். 

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அவர் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜூடோ ரத்னம் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவர் பேசுகையில், ஜூடோ ரத்னம் எனக்கு நீண்ட நாளாக பழக்கமுடையவர். அவர் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர். ஜூடோ ரத்னம் சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர். அவரது உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT