தமிழ்நாடு

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின்

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு ஆற்றிய உரை, அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியையும் தொடங்கி இருக்கிறோம். மருத்துவம் என்பது எளிமையானதாக - புதுமையானதாக - அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். 

அது குறித்து இந்த மாநாடு அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவம் நவீனமாக ஆகி வருகிறது. ஆனால் அதிகத் தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லார்க்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவக் காப்பீடு திட்டங்களின் மூலமாக வழங்குகிறோம். மக்களைத் தேடி மருத்துவம் - நம்மைக் காக்கும் 48 திட்டங்களின் மூலமாக தருகிறோம். என்றாலும் அதிகப்படியான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இந்த நாட்டில், அனைத்து தேவைகளையும் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் அது போதாது.  

இதில் தனியார் பங்களிப்பும் மிகமிக முக்கியமாக இருக்கிறது. அப்படி தனியார் மருத்துவமனைகள் பங்களிப்பு செய்யும்போது கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள். சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சென்னைக்கே மெடிக்கல் சிட்டி, மெடிக்கல் கேப்பிட்டல் என்றுதான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி எல்லாமே இங்கு உண்டு.

அந்த வகையில் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

கூட்டுறவுத் துறை உதவியாளா் பணி: 4 மையங்களில் எழுத்துத் தோ்வு

SCROLL FOR NEXT