தமிழ்நாடு

சித்தன்னவாசல் கல்குவாரி குளத்தில் 3 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

சித்தன்னவாசல் கல்குவாரி குளத்தில் 3 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சித்தன்னவாசல் கல்குவாரி குளத்தில் 3 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், சித்தனவாசல் அருகே உள்ள கல் குவாரிக்குள் கூத்தினிபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி சிவரஞ்சனி (28). இவர், தனது மகள்கள்  நிவேதா(7), தஷ்விகா(5), ஹரிணி(4 மாத கைக்குழந்தை) ஆகியோருடன் கல்குவாரி குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதில் மீட்கப்பட்ட நிவேதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

மேலும் சிவரஞ்சனி மற்றும் தஷ்விகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேசமயம் நான்கு மாத கைக்குழந்தை ஹரிணியை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT