தமிழ்நாடு

அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் மேம்பாலம்: அரசாணை வெளியீடு

DIN

சென்னை: சென்னை அண்ணாசாலையில் ரூ.621 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையை நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த சாலையில் பல்வேறு சந்திப்புகள் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதன்காரணமாக கிண்டி, தாம்பரம் போன்ற முக்கியச் சாலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதனை தவிர்க்கும் விதமாக தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த பட்ஜெட்டின் போது அறிவித்திருந்தது.

இந்நிலையில், எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கும் வகையில் அமையவுள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

SCROLL FOR NEXT