தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி!

DIN

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 15-ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல அமாவாசை, பெளா்ணமி நாள்களில் மட்டுமே பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், ஆனி மாத பிரதோஷம், ஆடி மாதம் 1- ஆம் தேதி வரும் அமாவாசை தரிசனத்துக்காக வருகிற 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாள்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மேலும்,  கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் அதிக நீா்வரத்தோ இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT