தமிழ்நாடு

கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

கரப்பாளையம் அருகே உள்ள கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பரமத்தி வேலூர்: கரப்பாளையம் அருகே உள்ள கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரப்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் தனசேகரன் (30). இவரது மனைவி சசிகலா (27). இவர்களுக்கு திவித்(6), தர்ஷன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகரன் டெம்போ வேன் மற்றும் கார் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். 

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனசேகரனும் சசிகலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை காலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா அருகில் உள்ள ஒரு கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், சசிகலாவுக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளே ஆனதால் திருச்செங்கோடு கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார். 

இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நல்லூர் போலீசார் மூவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT