தமிழ்நாடு

3-ஆவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

DIN

சென்னையில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 14 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னை மாதவரம், சோழிங்கநல்லூா், அம்பத்தூா் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூா், காக்களூா் பண்ணைகளில் வியாழக்கிழமை 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளா்கள் வருகை குறைவு காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT