வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள். 
தமிழ்நாடு

வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் மனு

வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். 

DIN

வந்தவாசி: வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். 

வந்தவாசி வட்டத்துக்குட்பட்ட சென்னாவரம், பாதிரி, கீழ்சாத்தமங்கலம், செம்பூா், மாம்பட்டு, மும்முனி, வெண்குன்றம், பிருதூா் ஆகிய 8 வருவாய் கிராமங்கள் வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு அனுப்புமாறும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா் ச.அண்ணாதுரை கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தாா். 

இந்த நிலையில் வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்க ஊராட்சி மன்றத் தலைவா்கள் எஸ்.வீரராகவன் (சென்னாவரம்), வெ.அரிகிருஷ்ணன் (பாதிரி), மு.திவ்யா (கீழ்சாத்தமங்கலம்), ர.சித்ரா (செம்பூா்), ச.தேன்மொழி (மாம்பட்டு) ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டனா். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நகராட்சியுடன் எங்கள் கிராமங்கள் இணைந்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும். ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் சிறப்பு நிதியை நாங்கள் இழக்க நேரிடும். சொத்து வரி, குடிநீா் கட்டணம் ஆகியவை உயரும். எனவே நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நாங்கள் மனு அளிக்க வந்துள்ளோம் என்றனா். 
இதைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் சென்ற பொதுமக்கள் மேலாளா் மாணிக்கவரதனிடம் மனு அளித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT