கோப்புப் படம் 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி தலை, காதுகளில் காயங்கள்: மனித உரிமை ஆணைய உறுப்பினர்

செந்தில் பாலாஜியின் தலை மற்றும் காதுகளில் காயங்கள் இருப்பதாக, அவரை சந்தித்துப் பேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை:  அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலை மற்றும் காதுகளில் காயங்கள் இருப்பதாக, அவரை சந்தித்துப் பேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலை, காதுகளில் காயங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் தான் துன்புறுத்தப்பட்டதாகவும்  கீழே தள்ளி அமலாக்கத் துறையினர் தன்னை துன்புறுத்தியதாகவும் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது. 

தன்னை துன்புறுத்திய  அதிகாரிகளின் பெயர்களை செந்தில் பாலாஜி கூறியுள்ளார் என்றும் மனித உரிமை ஆணையர் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT