கோப்புப்படம் 
தமிழ்நாடு

காஞ்சிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் மழை!

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில்  குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவிப்பின் படி, கடந்த 2 நாள்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் திடீரென இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் திடீரென கருமேங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் இரு நாள்களாக பெய்த மழை கோடை வெப்பம் தணிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில்  குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT