உத்தமபாளையம்: சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.
அந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குடிசை அமைத்து இலவச காலி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.