மெட்ரோ - என்.எல்.சி. ஒப்பந்தம்!
திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ - என்.எல்.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ - என்.எல்.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் மூலம் சென்னை மெட்ரோ பசுமை மின்சாரத்துக்கான அணுகலை என்.எல்.சி. வழங்கும்.
இந்த முயற்சியானது சென்னை மேட்ரோ ரயில் நிறுவனம் அதன் மின் கொள்முதல் செலவை மேம்படுத்த உதவுவதோடு மசுமை மூலமான மின்சாரத்துக்கான அணுகலையும் வழங்கும். இந்திய பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெறப்படவுள்ளது.
Advertisement
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, என்.எல்.சி. பொதுமேலாளர் பி.வாசுகி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.