வாழப்பாடி ஸ்ரீ சென்றாய பெருமாள் தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள். 
தமிழ்நாடு

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத  சென்றாயப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ. 25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பக்தர்களும், இளைஞர்களும் மேள வாத்திய இசைக்கேற்ப கிராமிய சேர்வை நடனமாடி மகிழ்ந்தனர். தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்து  சுவாமிக்கு படையல் வைத்தனர். தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு, குளிர்பானங்கள் இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி வரவேற்பு அளித்தனர். 

குடியிருப்பு பகுதிகளில் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  தேர் வெள்ளோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT