திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்கள் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பின்னல் நகரமான திருப்பூரில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து இரண்டாம் தர பின்னலாடைகளை வாங்கி தங்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக ராயபுரம், ரயில் நிலையம், காதர்பேட்டை பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான நைஜீரியர்கள் தங்கியுள்ளனர். இதில், சிலர் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
இதன் பேரில் ராயபுரம் பகுதியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் உபா(43), ஒபின்னா(32), அஃபாம் பாஸ்கல்(32), ஜான்பால் (34) ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க: இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு 7 பேர் பலி
இதையடுத்து, அவர்களைக் கைது செய்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.