கோப்புப்படம் 
தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு: தமிழக அரசு

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிப்புரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிப்புரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல  பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக 194 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT