வலையால் மூடப்பட்ட திகார் சிறைச்சாலை 
தமிழ்நாடு

திகார் சிறையை வலையால் மூடிய காவல் துறை: ஏன் தெரியுமா?

தில்லியிலுள்ள திகார் சிறை வளாகத்தை முழுக்க வலையால் மூடி காவல் துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

DIN

தில்லியிலுள்ள திகார் சிறை வளாகத்தை முழுக்க வலையால் மூடி காவல் துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். வெளியிலிருந்து சுவர்களைத் தாண்டி செல்போன்கள் வீசப்படுவதால், அதனைத் தடுக்கும் நோக்கத்தில் சிறை வளாகத்தை தடுப்புச் சுவரிலிருந்து வலையால் காவல் துறையினர் மூடியுள்ளனர். 

திகார் சிறையில் பல முக்கிய குற்றவாளிகள் தண்டனை பெற்று வருகின்றனர். எனினும் கடந்த சில நாள்களாக கைதிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாள்களுக்கு முன்பு திகார் சிறையில் கொலைக்கும்பல் தலைவன் டில்லு தாஜ்புரியா அவரின் எதிரிகளால் திட்டமிட்டு கொல்லப்பட்டார். 

தாஜ்புரியாவை புதிய சிறை அறைக்கு மாற்றியதை அறிந்துகொண்ட கொலையாளிகள் திட்டமிட்டு, சிறையிலேயே அவரைக் கொன்றுள்ளனர். 

இந்நிலையில், செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிறை வளாகம் முழுவதும் தடுப்புச் சுவரிலிருந்து வலை கட்டப்பட்டுள்ளது. வெளியிலிருந்து கைதிகளின் அறை இருக்கும் இடத்தினருகே செல்போன்கள் வீசப்படுவதால், காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT