தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்!

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பவில்லை என மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

DIN

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பவில்லை என மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

நாட்டில் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நேற்று (மே 19) அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என வதந்திகள் பரவின. இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT