தமிழ்நாடு

ஜூன் 3-ல் வடசென்னையில் பொதுக்கூட்டம்: திமுக

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 21) திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

DIN

ஜூன் 3-ல் வடசென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 21) திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-

ஜூன் 3 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்த விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.

வரும் ஜூன்  3 தொடங்கி, 2024 ஜூன் 3 வரை  கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT