தமிழ்நாடு

அரசு ஐடிஐகளில் ரூ.2,877 கோடியில் திட்டப் பணிகள்: தலைமைச் செயலா் ஆய்வு

DIN

அரசு ஐடிஐகளில் ரூ.2,877.43 கோடியில் நடைபெற்று வரும் புதிய திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) அவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிண்டி அரசு ஐடிஐ-யில் கட்டமைப்பு வசதி பணிகள் முடிவுறும் நிலையிலும், செங்கல்பட்டு அரசு ஐடிஐ-யில் முடிவு பெற்று தொடக்க விழாவுக்குத் தயாராகவும் உள்ளன.

ரூ.31 கோடியில் ஆய்வகங்கள்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு ஐடிஐகளில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் ரூ.2877.43 கோடியில் டாடா டெக்னாலஜிஸ் லிட். நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி வரும் ஆக.1 முதல் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிமனை கட்டடங்களை அமைக்க ஒவ்வொரு நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐடிஐ-களிலும் ரூ.31 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு ஐடிஐகளிலும் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் 30 -க்குள் முடிக்கப்படவுள்ளன.

ஆய்வின்போது, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையா் கொ.வீரராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT