தமிழ்நாடு

மே 28, 30-இல் பெங்களூா்-ஹவுரா, தானாப்பூா் சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரிலிருந்து ஹவுரா, தானாப்பூருக்கு மே 28, 30-ஆம் தேதிகளில் ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

DIN

பெங்களூரிலிருந்து ஹவுரா, தானாப்பூருக்கு மே 28, 30-ஆம் தேதிகளில் ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:பெங்களூரிலிந்து மே 28-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06569) மறுநாள் காலை 11.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சென்றடையும்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா (விசாகப்பட்டினம்), ஒடிஸா, வழியாக இயக்கப்படும்.

பெங்களூரிலிருந்து மே 30-ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06567) மறுநாள் காலை 8 மணிக்கு பிகாா் மாநிலம் தானாப்பூா் சென்றடையும்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடுா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி, தீனதயாள் உபாத்யாயா, பக்ஸாா், ஆரா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT