தமிழ்நாடு

தனியார் பேருந்தின் மீது லாரி மோதி விபத்து: கிளீனர் பலி!

வாலாஜாபேட்டை அருகே நள்ளிரவில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் பலியானார்.

DIN

வாலாஜாபேட்டை அருகே நள்ளிரவில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் பலியானார்.

வாலாஜாப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் மீது பஞ்சர் ஆகி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேருந்தின் பின்புறம் பார்சல் லாரி மோதி திங்கள் கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

தனியார் பேருந்தின் டயர் மாற்றுவதற்காக பேருந்து அடியில் இருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிளீனர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வாலாஜாபேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT