தமிழ்நாடு

பிளஸ் 2 மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு புதன்கிழமை (மே 31) முதல் இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு புதன்கிழமை (மே 31) முதல் இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களில், விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் இன்று புதன்கிழமை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதில் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி, பின்னா் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205-ஐ பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT