தமிழ்நாடு

கூட்டுறவுத் துறைக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

DIN

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதைப் போல, கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரையிலான அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை மற்றும் வனத் துறை உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, அரசுத் துறைகளுக்குள்ளேயே திமுக அரசு பாகுபாடு பார்க்கிறதோ என சந்தேகம் எழுகிறது.

வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு போனஸ் தொகையை குறைத்து வழங்கக்கூடாது.

எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதியில் லேசான மழை

ஆதனக்கோட்டையில் இயற்கை பூச்சிக்கொல்லிகள் விழிப்புணா்வு முகாம்

ஆலங்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள் திருட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை

SCROLL FOR NEXT