காங்கயம் அருகே, சாலை வேகத்தடை மீது விபத்துக்குள்ளான வேன். 
தமிழ்நாடு

காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 11 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.

DIN

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலை கூலி வேலைக்காக ஆள்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று புறப்பட்டு காங்கயம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது புதன்கிழமை காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால்மேடு பகுதி தனியார் பள்ளி அருகே உள்ள சாலை வேகத் தடையில் ஏறி, எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் சிதறி விழுந்தனர். 

இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர் ஒடி வந்து சாலையில் காயங்களுடன் இருந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT