தமிழ்நாடு

சென்னை வளசரவாக்கம் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் திடீர் மரணம்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் தீடீரென மரணம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சென்னை வளசரவாக்கத்தில் வினோத்குமார் என்பவர் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார்.

இந்த மையத்தில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், போதைக்கு அடிமையான விஜய் திடீரென மரணம் அடைந்துள்ளார். 

இதுகுறித்து விஜய் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக மரணம் அடைந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரித்துள்ளனர். 

இதுகுறித்து போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் விஜய் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT